இந்தியா

ஏர்செல் நிறுவனத்தை அடுத்து கவிழ்கிறதா வோடோபோன்? பிர்லா அதிர்ச்சி அறிவிப்பு!

Published

on

வோடபோன் நிறுவனத்தில் இருந்து விலக பிர்லா நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவின் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான வோடபோன் நிறுவனம் தற்போது 1.8 லட்சம் கோடி கடனில் தத்தளித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வோடபோன் ஐடியா நிறுவனத்திலிருந்து விலக குமாரமங்கலம் பிர்லா விருப்பம் தெரிவித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வோடபோன் நிறுவனத்தின் தனக்குள்ள 27 சதவீத பங்குகளை அரசிடமோ அல்லது வேறு நிதி நிறுவனங்களிடமோ தர தயார் என்று பிர்லா அறிவித்துள்ளார். ஆதித்யா பிர்லா குழுமத்தைச் சேர்ந்த குமாரமங்கலம் பிர்லா தன்னுடைய பங்குகளை விற்க தயார் என அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

வோடபோன் ஐடியா நிறுவனம் தொடர்ந்து செயல்பட அரசு அவசர நடவடிக்கை எடுக்குமாறும் அவர் அந்த கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிகிறது. வோடபோன் ஐடியா நிறுவனத்தின் 44 சதவீத பங்குகள் மற்றொரு நிறுவனரான வோடபோன் வசம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசு அவசர நடவடிக்கை எடுக்காவிட்டால் வோடபோன் ஐடியா நிறுவனம் கவிழ்ந்துவிடும் என்றும் தனது கடிதத்தில் பிர்லா குறிப்பிட்டுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே ஜியோ போனின் தொழில் போட்டியை சமாளிக்க முடியாமல் ஏர்செல் நிறுவனம் இழுத்து மூடப்பட்ட நிலையில் கிட்டத்தட்ட அதே நிலைமைதான் வோடோபோன் நிறுவனத்திற்கும் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version