இந்தியா

பறவை காய்ச்சல் பாதித்த மாநிலங்களுக்கு நிபுணர்கள் குழு அனுப்பப்பட்டது!

Published

on

பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு முதற்கட்ட நடவடிக்கையாக மத்திய நிபுணர்கள் குழு அனுப்பப்பட்டுள்ளது.

கேரளா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பறவைக்காய்ச்சல் வெகு தீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் காய்ச்சல் மனிதர்களுக்க பரவ வாய்ப்பில்லை என்று கூறப்பட்டாலும், அதற்கான அபாயம் இருப்பதாக தெரிகிறது.

இந்த நிலையில், பறவைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நான்கு மாநிலங்களுக்கு முதற்கட்டமாக நிபுணர்கள் குழுவை அனுப்பப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது. ஏற்கெனவே சுமார் 12 இடங்களில் பறவை காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது.

பண்னைகளில் வளர்க்கப்படும் பறவைகள், வான்கோழிகள், கோழிகள் அழிக்கப்பட்டுள்ளன. அதற்கு ஈடாக அந்தந்த உரிமையாளர்களுக்கு நிவாரண நிதி வழங்கப்படுகிறது. மேலும், இறந்த பறவைகளை பாதுகாப்பாக அப்புறப்படுத்தவும் நிபுணர்கள் குழு சார்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

மற்ற பறவைகள் மூலமாகவும், காகங்கள் போன்ற புலம்பெயர் பறவைகள் மூலமாக பறவை காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. எனவே, அண்டை மாநிலங்கள் உஷார் நிலையில் இருக்குமாறும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Trending

Exit mobile version