தமிழ்நாடு

பரவும் பறவைக் காய்ச்சல்.. சிக்கன் பிரியர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!

Published

on

இந்தியாவில் பறவைக் காய்ச்சல் வைரலாக பரவி வரும் நிலையில், சிக்கனை எப்படி சாப்பிட வேண்டும் என்பதை குறித்து மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் ஆளுகைக்குட்பட்ட இந்திய உணவு மற்றும் தர நிர்ணய ஆணையம் அண்மையில் பறவைக் காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது. அதில், உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தல்களை மேற்கோள்காட்டி, நன்கு சமைத்த சிக்கன் சாப்பிட்டால் பறவையிலிருந்து மனிதர்களுக்கு பறவைக் காய்ச்சல் தொற்ற வாய்ப்பில்லை. எனவே முழுமையாக வேக வைத்து சாப்பிட வேண்டும்.

வீட்டிலும் வெளிக்கடையிலும் கோழி அறுப்போர் பாதுகாப்பாக கோழியைத் தொட வேண்டும். கையுறை, முகக்கவசம் அணிய வேண்டும். முழுக்க முழுக்க எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். வீட்டில் வளர்ப்பு பறவைகள் இருந்தால், அவற்றைத் தொட வேண்டாம்.

மாமிசத்தைத் திறந்தவெளியில் வைத்திருக்க கூடாது. அவ்வறாறு திறந்த வெளியில் விற்கப்படும் இறைச்சிகளைத் தவிர்ப்பது நலம். பறவைக்காயச்சல் உள்ள பகுதிகளி் இருந்து முட்டை, கோழிக்கறி வாங்கக்கூடாது.

Trending

Exit mobile version