இந்தியா

பறவைக் காய்ச்சல் பீதி: சிக்கன், முட்டை சாப்பிட்டால் பாதிப்பா?

Published

on

கேரள மாநிலத்தில் வெகு வேகமாக பறவைக் காய்ச்சல் நோய் பரவி வருகிறது. அங்கிருக்கும் கோழிகள் மற்றும் வாத்துகளுக்கு பறவைக் காய்ச்சல் பரவி வருகிறது. இதையொட்டி அங்கிருந்து, தமிழகத்துக்குப் பறவைகளை கொண்டு வருவதற்கு கட்டுப்பாடு விதித்துள்ளது தமிழக அரசு. இந்நிலையில், பறவைக் காய்ச்சல் பரவும் இந்நேரத்தில் கோழிக்கறி மற்றும் கோழி முட்டையை சாப்பிடலாமா என்கிற கேள்வி பலருக்கு உதித்திருக்கலாம். அது குறித்து கால்நடை மருத்துவர் அனுசுயா விளக்கம் அளித்துள்ளார்.

‘பறவைக் காய்ச்சல் என்பது ஒரு வகை நுரையீரல் தொற்று நோய். இது அனைத்து வித பறவைகளுக்கும் வரக்கூடிய தொற்று நோய்தான். இந்த நோய், பறவைகளிடமிருந்து மனிதர்களுக்கும் பரவக்கூடியதுதான். பறவகைகளுக்கு, இந்த காய்ச்சல் வந்த இரண்டு முதல் மூன்று நாட்களுக்குள் இறந்துவிடும். இப்படி ஒரு பண்ணையிலோ அல்லது ஒரு பகுதியிலோ பறவைக் காய்ச்சலால் ஒரு பறவை இறந்தால், அந்தப் பகுதியைச் சுற்றியிருக்கும் பறவைகளும் கொன்றுவிடுவதுதான் வழக்கும். சுமார் மூன்று கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் இருக்கும் அனைத்துப் பறவைகளும், பறவைக் காய்ச்சல் ஏற்பட்ட இடத்தில் கொல்லப்படும்.

இப்படி பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்படும் கோழியையோ அல்லது வாத்தையோ நன்றாக வேக வைத்து, சமைத்து சாப்பிட்டால் ஒரு பாதிப்பும் வராது. குறிப்பாக அதிக வெப்பத்தில் செய்யப்படும் இந்திய உணவுகளால் பறவைக் காய்ச்சல் பாதிப்பு நமக்குப் பரவாது’ என்று விளக்கம் கொடுத்துள்ளார் மருத்துவர் அனுசுயா.

 

 

 

 

Trending

Exit mobile version