இந்தியா

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உயிரிழப்பு: ராணுவம் அறிவிப்பு

Published

on

இந்திய ராணுவத்தின் முப்படை தளபதி பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார் என சற்றுமுன் ராணுவம் அறிவித்துள்ளது.

நீலகிரி மாவட்டம் காட்டேரி அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் அவர்கள் உயிரிழந்தார். அவருடன் சென்ற அவரது மனைவியும் உயிரிழந்தார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் முதல் முப்படை தளபதி தளபதியாக 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பிபின் ராவத் அவர்கள் நியமனம் செய்யப்பட்டார். தரைப்படை, கப்பற்படை, விமானப்படை ஆகிய படைகளின் முதல் தளபதியாக பதவி வகித்த பெருமை அவருக்கு உண்டு.

முப்படை தளபதி ஆவதற்கு முன் படைத்தளபதிகள் குழுவின் தலைவராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 2016 டிசம்பரில் இருந்து 2019 டிசம்பர் 31 வரை இந்திய ராணுவ தலைமை தளபதியாக பதவி வகித்தார். 2019 இல் இருந்து முப்படை தலைமை தளபதியாக பதவியில் இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த பிபின் ராவத் அவர்கள் பல தலைமுறைகளாக ராணுவத்தில் பணிபுரிந்து குடும்பத்திலிருந்து வந்தவர் என்பது குறிபிடத்தக்கது பிபின் ராவத் அவர்களின் தந்தை இந்திய ராணுவத்தில் லெப்டினன்ட் ஜெனரல் ஆக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version