இந்தியா

வரி கட்டுவோருக்கு முதலில் கொரோனா தடுப்பூசி- பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் தலைவர் சொன்ன ‘பகீர்’ யோசனை!

Published

on

இந்தியாவில் கடந்த சில நாட்களாக ஒரு நாளில் 1 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது நாட்டில் கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகின்றது. இப்படியான சூழலில் கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் நாட்டில் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அனுமதி வழங்கியது. அதே நேரத்தில் கடந்த சில நாட்களாக சில அரசியல் கட்சி தரப்புகள், நாட்டில் 18 வயது கடந்த அனைவருக்கும் கொரோடா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி வருகின்றன. இதை ஏற்க மறுத்து கருத்து தெரிவித்துள்ளது அரசு. இது விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது.

நாட்டில் போதுமான அளவு கொரோனா தடுப்பூசி டோஸ்கள் இருப்பில் இல்லை என்பது தான் மத்திய அரசின் இந்த அதிர்ச்சி முடிவுக்கு காரணம் என சொல்லப்படுகிறது. மேலும் பல கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி மருந்து இந்தியாவில் இருந்து ஏற்றுமதியும் செய்யப்பட்டுள்ளது. இப்படி நாட்டு மக்களுக்கு இல்லாமல் ஏன் கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி செய்யப்படுகிறது என்கிற விமர்சனங்களும் எழுந்துள்ளன.

இந்நிலையில் பிரபல இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் தலைவரான கிரண் மஜும்தார் ஷா, ‘நாட்டில் வரி செலுத்தும் நபர்களுக்கு மட்டுமே முதலில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும். அவர்கள் வெறும் 3 கோடி பேர் தான். அவர்கள் இறந்துவிட்டால் நாடு எப்படி செயல்படும்’ என சர்ச்சைக்குரிய ட்வீட் பதிவிட்டிருந்தார்.

இதற்கு நெட்டிசன்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கவே, ‘நான் தடுப்பூசி பற்றி வேடிக்கையாகத் தான் கருத்து தெரிவித்தேன். அது மிகவும் சீரியஸாக எடுத்துக் கொள்ளப்பட்டதால் அந்தப் பதிவை நீக்குகிறேன். நமது நகைச்சுவை உணர்வுக்கு என்ன தான் ஆச்சு?’ என தற்போது கூறியிருக்கிறார்.

Trending

Exit mobile version