சினிமா செய்திகள்
சர்கார் உடன் மோத வரும் பில்லா பாண்டி!
தாரை தப்பட்டை, மருது ஆகிய படங்களில் வில்லனாக நடித்து இருந்தவரும் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளருமான ஆர் கே சுரேஷ் பில்லா பாண்டி என்ற திரைப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார்.
தீபாவளியின் போது விஜயின் சர்க்கார் படம் திரைக்கும் வர இருக்கும் நிலையில் அதைப் பற்றி எல்லாம் கவலை இல்லாமல் பில்லா பாண்டி திரைப்படம் வெளியாக உள்ளது.
சரவனசக்தி இயக்கி இருக்கும் இந்தத் திரைப்பாத்தில் யோகி பாபு, இந்துஜா, தம்பி ராமையா உள்ளிட்டவர்கள் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.