இந்தியா

இந்திய ரொட்டி தயாரிப்பது எப்படி? தொழிலதிபர் பில்கேட்ஸ் வீடியோ வைரல்!

Published

on

இந்தியாவில் பெரும்பாலோர் சாப்பிடும் ரொட்டி தயாரிப்பது எப்படி என்பதை குறித்த பிரபல தொழிலதிபர் பில்கேட்ஸ் வீடியோ ஒன்று இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

உலகின் முன்னணி தொழில் அதிபர்களில் ஒருவர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில்கேட்ஸ் என்பதும் அவரது நிறுவனத்தில் ஆயிரக்கணக்கானோர் பணிபுரிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் பில்கேட்ஸ் இந்தியா வந்திருந்தபோது அவருக்கு செஃப் ஒருவர் ரொட்டி செய்வது எப்படி என்று கற்றுக் கொடுத்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

இந்த வீடியோவில் பிரபல செஃப் எய்டன் பெர்நாத் என்பவர் மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ் அவர்களுக்கு ரொட்டி செய்வது எப்படி என்று கற்றுக் கொடுக்கிறார். முதலில் மாவு போட்டு அதில் தண்ணீரை ஊற்றி மாவை நன்றாக பிசைய வேண்டும் என்றும் அதன் பிறகு அதை பூரிக்கட்டையால் தேய்க்க வேண்டும் என்றும் அதன் பிறகு அதை தவாவில் போட்டு சூடுபடுத்த வேண்டும் என்றும் இறுதியாக நெய் தடவ வேண்டும் என்றும் சொல்லிக் கொடுக்கிறார்.

பிரபல செஃப் எய்டன் பெர்நாத் சொல்லி கொடுத்தது போல் பில்கேட்ஸ் மாவை கிண்ணத்தில் வைத்து தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கி ரொட்டியை உருவாக்கினார். அதன் பிறகு கடைசியில் அந்த ரொட்டியில் நெய் தடவி அவர் சுவைத்து பார்த்து மிகவும் அருமையாக இருக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த வீடியோவை பிரபல செஃப் எய்டன் பெர்நாத் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது என்று குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் இந்தியா வந்த பில் கேட்ஸ் பீகாரில் கோதுமை விவசாயிகளை சந்தித்து புதிய ரக கோதுமை விதை குறித்த தொழில் நுட்பங்கள் குறித்து கேட்டார். அதேபோல் கேண்டின்கள் நடத்தி வரும் பெண்களையும் சந்தித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோவுக்கு பலர் பலவிதமான கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.

 

author avatar
seithichurul

Trending

Exit mobile version