உலகம்

தாத்தாவானார் பில்கேட்ஸ்.. குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட மகள்..!

Published

on

உலகின் முன்னணி பணக்காரரும் மைக்ரோசாப்ட் நிறுவனருமான பில்கேட்ஸ் மகள் குழந்தை பெற்றுள்ளதை அடுத்து அந்த குழந்தையின் புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. மேலும் மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ் தற்போது தாத்தாவாகிவிட்டார் என அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

உலகின் முன்னணி பணக்காரர் ஆனால் மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் மூத்த மகள் ஜெனிஃபர் கேட்ஸ் மார்ச் 4ஆம் தேதி தனதுக்குகுழந்தை பிறந்ததாக அறிவித்துள்ளார். இது குறித்து அவரும் அவரது கணவர் நாசரும் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளனர்.

என்ன குழந்தை பிறந்தது என்பது குறித்த தகவலையோ அல்லது குழந்தையின் முகத்தையோ தனது இன்ஸ்டாகிராம் புகைப்படத்தில் பதிவு செய்யவில்லை என்றாலும் இந்த புகைப்படம் தற்போது மிகப்பெரிய அளவில் வைரலாகி வருவது. எங்களுடைய ஆரோக்கியமான குடும்பத்திலிருந்து ஒரு புதிய விருந்தாளியை பெற்றுள்ளோம் என்று மட்டும் அந்த புகைப்படத்தில் கேப்ஷனாக பதிவு செய்துள்ளனர்.

இந்த புகைப்படத்தை பில்கேட்ஸ் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து தனது மகள் மற்றும் மருமகன் பெற்றோர் ஆகி உள்ளதை நினைத்து நான் பெருமைப்படுகிறேன் என்று கூறியுள்ளார். மேலும் பில்கேட்ஸின் முன்னாள் மனைவி மெலிண்டா அவர்களும் தனது சமூகவலைதளத்தில் புதிதாக பிறந்த குழந்தைக்கு தனது வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது சமூக வலைதளத்தில் புதிய குழந்தையை இந்த உலகிற்கு வரவேற்கிறோம் என்றும் என் இதயம் நிரம்பி வழிகிறது என்றும் புதிய பெற்றோர்களுக்கு வாழ்த்துக்கள் என்றும் கூறியுள்ளார்.

ஜெனிபர் கேட்ஸ் காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பதும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அவர் கர்ப்பமான நிலையில் தற்போது குழந்தை பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒரு சர்வதேச குதிரை போட்டியில் ஜெனிபர் கேட்ஸ் கலந்து கொண்டிருந்த போதுதான் முதன்முதலில் நாசர் என்பவரை பார்த்தார் என்பதும், அதன் பின்னர் இருவரும் நட்பாக பழகி பின்னர் திருமணம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகிற்கே மைக்ரோசாப்ட் என்ற நிறுவனத்தை அறிமுகம் செய்த பில் கேட்ஸ் தனது பேரக் குழந்தைக்கு என்னென்ன பாடங்களை கற்பித்துக் கொடுப்பார் என நெட்டிசன்கள் கேள்வியாக எழுப்பி வருகின்றனர். ஆரோக்கியம் அரசியல் மற்றும் காலநிலை ஆகியவற்றின் அடிப்படையை எனது பேர குழந்தைக்கு கற்றுக் கொடுப்பேன் என்றும் அந்த துறைகளில் அவர் நிபுணராக தன்னால் முடிந்ததை செய்வேன் என்றும் பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார். என்னுடைய அறிவை ஆர்வத்தை பகிர்ந்து கொள்ள ஒரு பேரக் குழந்தை கிடைத்துள்ளதால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version