உலகம்

விவாகரத்தை முடிவை அறிவித்தனர் பில்கேட்ஸ்-மெலிண்டா தம்பதியினர்!

Published

on

மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டா இருவரும் கடந்த 27 ஆண்டுகளாக தம்பதிகளாக ஒற்றுமையாக வாழ்ந்து வந்த நிலையில் தற்போது அவர்கள் தங்களுடைய விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

27 ஆண்டுகளுக்கு பின்னர் தாங்கள் பிரிய முடிவு செய்திருப்பதாகவும் சட்டப்படி விவாகரத்து செய்ய முடிவு செய்திருப்பதாகவும் இருவரும் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: உலகம் முழுவதும் பரந்து செயல்படும் அறக்கட்டளை ஒன்றை நிறுவி அதன் மூலம் அனைத்து நாடுகளின் மக்களுக்கும் சுகாதாரம் கிடைக்க வழி வகைகள் செய்து தரப்பட்டுள்ளன.

FILE – In this Feb. 1, 2019, file photo, Bill and Melinda Gates smile at each other during an interview in Kirkland, Wash. The couple announced Monday, May 3, 2021, that they are divorcing. The Microsoft co-founder and his wife, with whom he launched the world’s largest charitable foundation, said they would continue to work together at The Bill & Melinda Gates Foundation. (AP Photo/Elaine Thompson, File)

இந்த பணிகளை தொடர்ந்து நாங்கள் நாங்கள் செய்ய முடிவு செய்து இருக்கிறோம். ஆனால் அதே நேரத்தில் தம்பதிகளாக நாங்கள் இணைந்து வாழ விரும்பவில்லை. அதனால் பிரிய முடிவு செய்து இருக்கிறோம்.

எங்களுடைய வாழ்வின் அடுத்த கட்டத்தில் ஒன்றாக இணைந்து தம்பதிகளாக வளர்ச்சி அடைவதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று தெரிவித்துள்ளனர். உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்ஸ் தனது மனைவியை விவாகரத்து செய்ய இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version