உலகம்

2025ஆம் ஆண்டிற்கு பின் பைக்குகளுக்கு தடை: அரசின் அதிரடி உத்தரவு!

Published

on

2025 ஆம் ஆண்டுக்குப் பின் பைக்குகளுக்கு தடை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உலகம் முழுவதும் வாகனங்களின் கரும்புகை காரணமாக சுற்றுச்சூழலில் மாசு ஏற்படுகிறது என்றும் அதனால் வாகனத்தில் புகைகளை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

குறிப்பாக இந்தியாவின் தலைநகர் டெல்லியில் அதிக அளவு காற்றுமாசு ஏற்படுவதற்கு அதிக அளவு வாகனங்கள் உபயோகிப்பதும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் வியட்நாம் நாட்டின் தலைநகர் ஹேனெய் என்ற நகரில் வரும் 2025 ஆம் ஆண்டிற்கு பின்னர் பைக்குகளுக்கு தடை விதிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
போக்குவரத்து நெரிசல் மட்டுமின்றி வாகனங்களில் இருந்து வெளிவரும் புகையை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக வியட்நாம் அரசு அறிவித்துள்ளது. ஹேனெய் நகரில் மட்டும் 56 லட்சம் மோட்டார் பைக்குகள் பொது மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்பதும் போதுமான போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தினால் அதிக நபர்கள் இருசக்கர வாகனங்களை வாங்கி பயன்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அடுத்து வரும் ஒரு சில ஆண்டுகளில் வாகன போக்குவரத்து அதிகரிக்கப்படும் என்றும் அதன்பிறகு பைக்குகளுக்கு தடை விதிக்கப்படும் என்றும் வியட்நாம் அரசு தெரிவித்துள்ளது. 2030ஆம் ஆண்டில் அமல்படுத்தப்பட இருந்த மோட்டார் பைக் தடைசட்டம் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே ஒரு சில நகரில் மட்டும் சோதனை முயற்சியாக தடை செய்யப்படும் என்றும் 2030ஆம் ஆண்டு வியட்நாம் நாடு முழுவதுமே பைக்குகளுக்கு தடை செய்யப்படும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

Trending

Exit mobile version