இந்தியா

மோடி கொடுத்த பணத்தை செலவு செய்த பீகார் இளைஞர் கைது: அதிர்ச்சி தகவல்

Published

on

வங்கி கணக்கில் தவறுதலாக வந்தா ரூபாய் 5.5 லட்சத்தை திருப்பி தர மறுத்த இளைஞர் அந்த பணம் பிரதமர் மோடி கொடுத்த பணம் என்று காரணம் கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தில் உள்ளக ககாரியா என்ற மாவட்டத்தில் ரஞ்சித் தாஸ் என்ற இளைஞரின் வங்கி கணக்குக்கு தவறுதலாக ரூ.5.5 இலட்சம் வந்தது. இதனை அடுத்து சுதாரித்துக்கொண்ட வங்கி ஊழியர்கள் உடனடியாக ரஞ்சித்தை தொடர்பு கொண்டு அந்த பணத்தை திருப்பிக் கொடுக்குமாறும், அவருடைய வங்கி கணக்கில் தவறுதலாக அந்த பணம் வந்து விட்டதாகவும் தெரிவித்தனர்.

ஆனால் இளைஞர் ரஞ்சிதா அந்த பணத்தை திருப்பிக் கொடுக்க மறுத்ததோடு, அந்த பணம் பிரதமர் மோடி சொன்ன ரூபாய் 15 லட்சத்தில் முதல் தவணை தான் இந்த 5.5 லட்சம் என்று நினைத்துதான் செலவு செய்து விட்டதாகவும் அதனால் அந்த பணத்தை திருப்பிக் கொடுக்க முடியாது என்றும் வங்கி அதிகாரிகளிடம் அவர் வாக்குவாதம் செய்தா.ர் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து வங்கி அதிகாரிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் இளைஞர் ரஞ்சித் தாஸை கைது செய்த காவல் துறையினர் அவரிடம் விசாரணை செய்து வருகின்றனர் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 2014ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலின்போது சுவிஸ் பேங்கில் இந்தியர்களின் பணம் கோடிக்கணக்கில் இருப்பதாகவும் அந்த பணத்தை மீட்டு ஒவ்வொரு இந்தியருக்கும் 15 லட்ச ரூபாய் பிரித்துக் கொடுப்பேன் என்றும் பிரதமர் மோடியின் தேர்தல் பிரச்சாரத்தின் போது வாக்குறுதி கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version