இந்தியா

தனது சொந்த திருமணத்திற்கே செல்ல மறந்த மணமகன்.. அதன்பின் நடந்த களேபரம்..!

Published

on

பீகாரில் இளைஞர் ஒருவர் தனது சொந்த திருமணத்திற்கு செல்வதற்கு மறந்துவிட்ட சம்பவம் தரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் மணமகள் எடுத்த அதிரடி முடிவு அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது.

கடந்த சில வாரங்களாக திருமணத்தில் பல வினோதமான சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. குடித்துவிட்டு வந்த மணமகனை திருமணம் செய்ய மாட்டேன் என்று கூறிய மணமகள்ம் குறைந்த மதிப்பெண் பெற்ற மணமகளை திருமணம் செய்ய முடியாது என்று கூறிய மணமகன் உள்பட பல சம்பவங்கள் சமீப காலமாக திருமணத்தின் போது நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் மணமகன் ஒருவர் தனது சொந்த திருமணத்திற்கு குடிபோதையில் செல்ல மறந்த சம்பவம் திருமண வீட்டாருடைய பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பீகாரியில் திருமணத்திற்கு முந்தைய நாள் மணமகன் தனது நண்பர்களுடன் மது அருந்தி உள்ளார். அதிகப்படியான மது அருந்தியதால் அவரால் அதிகாலையில் திருமணத்திற்கான நேரத்தில் எழுந்திருக்க முடியவில்லை.

நீண்ட நேரம் கழித்து மணமகன் போதை தெளிந்து எழுந்து பார்த்தபோது திருமண நேரம் முடிந்து விட்டது என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இந்த நிலையில் திருமணத்திற்கு மணமகன் வராததால் மணமகன் வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர். அவரை பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதனை அடுத்து மணமகன் மற்றும் மணமகள் வீட்டார் இடையே பிரச்சனை எழுந்தது.

இந்த திருமணத்திற்காக தங்கள் லட்சக்கணக்கில் செலவு செய்துள்ளதாகவும், அந்த பணத்தை தர வேண்டும் என்று மணமகள் விட்டார்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் மணமகன் மண்டபத்திற்க் வந்த போது இரு குடும்பத்தினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து தற்போது மணமகன் வந்துவிட்டாரே, இப்போதுதிருமணம் செய்து கொள்ளலாம் என்று மணமகன் வீட்டார் கூறிய போது மணமகள் கண்டிப்பாக முடியாது என்று கூறிவிட்டார்.

சொந்த திருமணத்திற்கு வருவதற்கு கூட மறந்து விட்ட இந்த நபரை திருமணம் செய்ய மாட்டேன் என்று கூறியதை அடுத்து திருமணம் ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டது, இதனை அடுத்து திருமணத்திற்கான செலவை கொடுக்க வேண்டும் என்று மணமகள் விட்டார் தெரிவித்த போது பிரச்சனை எழுந்தது. இந்த பிரச்சனையை மத்தியஸ்தம் செய்ய காவல்துறையினர் வந்து இருவீட்டாரையும் சமாதானம் செய்தனர், இந்த சம்பவம் அந்த பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தனது சொந்த திருமணத்திற்கு கூட வர மறந்து போன அந்த இளைஞருக்கு நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version