இந்தியா

மருத்துவமனைக்கு வந்த முதல்வருக்கு ‘கோ பேக் நிதிஷ் குமார்’ என்று எதிர்ப்பு தெரிவித்த மக்கள்!

Published

on

பீகாரில் கடந்த மூன்று வாரங்களாக 100-க்கும் அதிகமான குழந்தைகள் மூளைக்காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் மூன்று வாரங்கள் கழித்து முசாபர்பூர் ஸ்ரீகிருஷ்ணா மருத்துவமனையில் மூளைக்காய்ச்சலால் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளைப் பார்வையிட அம்மாநில முதல்வர் சென்றுள்ளார்.

மூன்று வாரம் கழித்து குழந்தைகளைப் பார்க்க வந்த முதல்வரைக் கண்டித்து அங்கு கூடியிருந்த பெற்றோர்கள் ‘கோ பேக் நிதிஷ் குமார்’ என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் முதல்வர் மருத்துவமனைக்கு வந்த நாள் மட்டும் இலவசமாகக் குடிநீர் வழங்கப்பட்டதாகவும், மற்ற நாட்களில் 25 ரூபாய் வரை கொடுத்து ஒரு பாட்டில் வாங்கும் நிலை உள்ளது என்று கூறப்படுகிறது.

மக்களைக் கண்டுகொள்ளாத முதல்வரைக் கண்டித்து பீகார் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

கடுமையான வெயில் காரணமாக, அங்குள்ள மக்களைக் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியில் வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது. 8-ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு ஜூன் 22-ம் தேதி வரை விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version