இந்தியா

பாஜக வெற்றி பெற்றால் பீகாரில் கொரோனா தடுப்பூசி இலவசம்.. தமிழகத்தின் நிலை என்ன?

Published

on

பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான அறிக்கையை பாஜக இன்று வெளியிட்டுள்ளது..

பீகார் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், புதன்கிழமை காங்கிரஸ் கட்சி தங்களது தேர்தல் அறிகையை வெளியிட்டது. இந்நிலையில் இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

1) பீகார் சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றால், அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும்.
2) பீகரின் நகரம் மற்றும் கிராமங்களில் 30 லட்சம் மக்களுக்கு வீடு கட்டுக்கொடுக்கப்படும்.
3) பீகார் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகள் இந்தி மொழியில் கற்பிக்கப்படும்.
4) புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

இதில் நமக்கு உள்ள சந்தேகம் என்னவென்றால், பாஜக தோல்வி அடைந்தால் பீகாருக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசியை வழங்காதா? சரி, பீகாருக்கு இலவசம். பிற மாநிலங்களின் நிலை என்ன?

பீகாருக்கு என்று பீகாரி என்ற மொழி உள்ள போது, ஏன் இந்தியில் பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தாய் மொழியில் கற்பது தான் சிறந்தது. பீகார் மக்களுக்கு பீகாரி தானே தாய் மொழி.

பாஜகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு இருப்பது நியாயமா? உங்கள் கருத்துக்களைக் கீழ் பதிவிடுங்கள்.

Trending

Exit mobile version