சினிமா செய்திகள்

இன்னைக்கு பிகில் ட்ரீட்!

Published

on

தளபதி விஜய் நடிப்பில் வரும் தீபாவளிக்கு வெளியாகப்போகும் பிகில் படத்தின் மாஸ் அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி காலையிலேயே ஒரு ட்வீட்டை தட்டி விட்டு, தளபதி ரசிகர்களை சோஷியல் மீடியாவில் பயங்கர வெறியுடன் ட்ரெண்ட் செய்ய தூண்டியுள்ளார்.

ஆனால், அந்த ட்வீட்டில், இந்த அறிவிப்பு டீசர், சிங்கிள், டிரைலர், ஆடியோ லான்ச் பற்றியது அல்ல, அதைவிட நாம் அனைவரும் எதிர்பார்க்கும் ஒரு அப்டேட் என பயங்கர பில்டப் கொடுத்துள்ளார்.

ஒருவேளை நாயகி நயன்தாராவின் போஸ்டர் லுக் அல்லது வேறு ஏதாவது பிசினஸ் குறித்த முக்கிய தகவலாக இருக்குமா? என அனைத்து மீடியாக்களும் தலையை பிய்த்துக் கொண்டு யோசிக்க செய்துள்ளார் அர்ச்சனா கல்பாத்தி. இன்று மாலை 6 மணிக்கு அது எந்த மாதிரியான அப்டேட் என்பது தெரிந்துவிடும் காத்திருப்போம்.

seithichurul

Trending

Exit mobile version