சினிமா செய்திகள்

விஜயின் ‘பிகில்’ படம் லாபமா? நட்டமா? அதிகாரப்பூர்வமாக அறிவித்த அர்ச்சனா கல்பாத்தி!

Published

on

விஜய், நயன்தாரா நடிப்பில், அட்லி இயக்கத்தில் தீபாவளிக்கு வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் திரைப்படம் பிகில்.

இப்படத்துடன் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி திரைப்படமும் ரசிகர்களிடையில் நல்ல வரவேற்பைப் பெற்று இருந்தது. இந்நிலையில் பிகில் திரைப்படம் லாபமா? நட்டமா? என பலருக்கும் கேள்வி எழுந்துள்ளது.

அந்த கேள்விக்கு படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “பிகில் படம் எங்களுக்கு லாபம் தான். நல்ல லாபத்தைத் தான் பெற்றுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

பிகில் படம் 180 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியதாக, ஏற்கனவே தயாரிப்பு தரப்பு தகவல்கள் வெளியிட்டு இருந்தன. இரண்டு வாரங்களாக பிகில் திரைப்படம் திரை அரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கும் நிலையில் உலகம் முழுவதும் 200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது என்று பாக்ஸ் ஆபிஸ் தகவல்கள் கூறுகின்றன.

seithichurul

Trending

Exit mobile version