சினிமா செய்திகள்

பக்காவாக பிசினஸ் ஆகும் பிகில்!

Published

on

விஜய் நடிப்பில் உருவாகி வரும் பிகில் படத்தின் அப்டேட்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது. நேற்று மட்டுமே தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, இரு பெரும் பிசினஸ் அப்டேட்ஸ்களை வெளியிட்டுள்ளார்.

அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா, கதிர், இந்துஜா நடிப்பில் உருவாகியுள்ள படம் பிகில். இந்த படத்தின் டைட்டில் மற்றும் போஸ்டர்கள் நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகின.

இந்நிலையில், தற்போது, படத்தின் தமிழக தியேட்டர்களில் வெளியிடும் உரிமையை ஸ்க்ரீன் ஸீன் நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்றும், சர்வதேச உரிமையை எக்ஸ்ஜென் ஸ்டூடியோ மற்றும் யுனைடட் இந்தியா எக்ஸ்போர்ட்டர்ஸ் ஆகிய இரு நிறுவனங்கள் இணைந்து கைப்பற்றியுள்ளது என்ற மகிழ்ச்சிகரமான செய்தியையும் ஏஜிஎஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிகில் படம் வெளியாவதற்கு முன்பாகவே பல கோடி வசூலை குவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

Trending

Exit mobile version