சினிமா

அடேங்கப்பா….. அஜித்தை முந்திய விஜய்!

Published

on

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் பிகில் படத்தின் வியாபாரம் தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. நேற்று பிகில் படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, இரு பெரும் பிசினஸ் அப்டேட்ஸ்களை வெளியிட்டார்.

அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா, கதிர், இந்துஜா நடிப்பில் உருவாகியுள்ள படம் பிகில். இந்த படத்தின் டைட்டில் மற்றும் போஸ்டர்கள் நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகின. இந்நிலையில், தற்போது, படத்தின் தமிழக தியேட்டர்களில் வெளியிடும் உரிமையை ஸ்க்ரீன் ஸீன் நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்றும், சர்வதேச உரிமையை எக்ஸ் ஜென் ஸ்டூடியோ மற்றும் யுனைடட் இந்தியா எக்ஸ்போர்ட்டர்ஸ் ஆகிய இரு நிறுவனங்கள் இணைந்து கைப்பற்றியுள்ளது என்று ஏஜிஎஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

பிகில் படம் வெளியாவதற்கு முன்பாகவே பல கோடி வசூலை குவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதில் ஸ்க்ரீன் சீன் நிறுவனத்திற்கு 70 கோடி ரூபாய்க்கு தமிழ்நாடு உரிமை விற்பனையாகியுள்ளதாகவும், இந்தி உரிமை 30 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளதாகவும். வெளிநாட்டு உரிமையை எக்ஸ் ஜென் ஸ்டூடியோ, யுனைட்டடு இந்தியா எக்ஸ்போர்ட்டர்ஸ் நிறுவனங்கள் 22 கோடி ரூபாய்க்கு பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை 46 கோடி ரூபாய்க்கும், ஆடியோ உரிமை 3.5 கோடி ரூபாய்க்கும் விற்பனையாகியுள்ளன. பிகில் படம் முழுமையாக நிறைவடையாத நிலையில் அந்த படம் இப்போதே 171.5 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது.

அதே நேரத்தில் நடிகர் அஜித் நடித்து வரும் நேர்கொண்ட பார்வை படத்தின் தமிழக உரிமையை ஸ்கிரீன் சீன் நிறுவனம்தான் பெற்றுள்ளது. இந்த படத்துக்கு தமிழ்நாடு உரிமையை 55 கோடி ரூபாய்க்கு தயாரிப்பாளர் போனி கபூர் நிர்ணயித்துள்ள நிலையில் அதனை 37 முதல் 40 கோடிக்கு பெற ஸ்கிரீன் சீன் நிறுவனம் முயற்சித்து வருகிறது. அந்த வகையில் அஜித் படத்தை விட விஜய் படம் நல்ல வியாபாரம் ஆகியுள்ளது.

Trending

Exit mobile version