சினிமா செய்திகள்

இறுதிகட்டத்தை நெருங்கிய பிகில் ஷூட்டிங்; மாஸ் அப்டேட் கொடுத்த ஹீரோ!

Published

on

பிகில் படத்தின் ஷூட்டிங் இறுதிகட்டத்தை எட்டி வருகிறது. மேலும், இந்த படத்தில் நடித்து வரும் நாயகன் கதிர் தனது ஷூட்டிங் முழுவதும் முடிந்து விட்டது என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அர்ச்சனா கல்பாத்தி தயாரிப்பில் அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் பிகில். வரும் தீபாவளிக்கு படம் ரிலீசாகவுள்ள நிலையில், படத்தில் நடித்து வரும் முக்கிய நடிகரான கதிர், தனது படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து விட்ட சந்தோஷமான செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மேலும், விஜய் அண்ணாவின் அரவணைப்பு தனக்கு மிக்க மகிழ்ச்சியை அளித்தது என்றும் பதிவிட்டுள்ளார்.
மேலும், தனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநர் அட்லிக்கும் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

விஜய், நயன்தாரா நடிப்பில் உருவாகி உள்ள பிகில் படம் பெண்கள் கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது. இதில், விஜய் கால்பந்தாட்ட அணியின் கோச்சாக நடித்துள்ளார்.

பிளாஷ்பேக் காட்சிகளில் விஜய், கதிர் கால்பந்தாட்ட வீரர்களாக வருகிறார்களாக இல்லை விஜய்க்கு இந்த படத்தில் தந்தை மகன் என இரண்டு கேரக்டர்களா என்ற குழப்பம் நிலவி வருகிறது.

விரைவில் பிகில் படத்தின் டீசர் ரிலீஸ் ஆனால், இந்த குழப்பம் அகலும் என எதிர்பார்க்கப்படுகிறது

seithichurul

Trending

Exit mobile version