சினிமா செய்திகள்

முதல் நாளே ஆரம்பித்தது பிரச்சனை: வேலையை காட்டிய வனிதா!

Published

on

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி நேற்று தொடங்கிய நிலையில் போட்டியாளர்களான சுரேஷ் சக்கரவர்த்தி, அபிநய், நிரூப், வனிதா விஜயகுமார், பாலாஜி முருகதாஸ், ஜூலி, ஸ்ருதி, அனிதா சம்பத், தாமரை, ஷாரிக், தாடி பாலாஜி, சினேகன் மற்றும் அபிராமி ஆகியோர் கமல்ஹாசன் முன்னிலையில் அறிமுகம் செய்யப்பட்டனர். நேற்றைய எபிசோடு முழுவதுமாக போட்டியாளர்களின் அறிமுக நிகழ்ச்சி மட்டுமே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று பிக்பாஸ் வீட்டில் முதல் நாள் தொடங்கிய நிலையில் முதல் நாளிலேயே வனிதா தனது வேலையைக் காட்டத் தொடங்கிவிட்டார். இன்றைய முதல் நாள் கொடுக்கப்பட்ட டாஸ்க்கில் திடீரென வெளியேறிய வனிதா, ‘இதை முடிவு செய்வதற்கு நீங்கள் யார்? என்றும், மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் இந்த டாஸ்க்கில் இருந்து நான் விலகுகிறேன் என்றும் ஆவேசமாக கூறி சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த டாஸ்க்கின் ஒரு கேள்வியாக நீங்கள் ஒருவரை பற்றி புரளி கூறி அவரிடமே மாற்றிக்கொண்டது உண்டா? என்ற கேள்விக்கு தான் வனிதா இவ்வாறு கோபப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த நிலையில் இன்று காலை நாமினேஷன் செய்யப்பட்ட நிலையில் பெரும்பாலானோர் வனிதாவை நாமினேஷன் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றவர்கள் மேல் தனது கருத்தை வனிதா திணிப்பதாகவும், தான் பேச விரும்புவதையே அனைவரும் பேச வேண்டும் என்றும் விரும்புவதாகவும் சக போட்டியாளர்கள் என்று பாராமல் உத்தரவு பிறப்பிக்கும் வகையில் அவர் பேசுவதாகவும் போட்டியாளர்கள் குற்றம்சாட்டி வனிதாவை நாமினேட் செய்தனர். வனிதாவை அடுத்து அனிதா, ஜூலி, சுரேஷ், பாலாஜி முருகதாஸ், ஆகியோர்களும் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

24 மணி நேரமும் ஹாட்ஸ்டார் ஓடிடியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் உள்ள போட்டியாளர்கள் அனைவருமே திறமையானவர்கள் என்பதால் சலிப்பில்லாமல் சென்று கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடதக்கது.

seithichurul

Trending

Exit mobile version