செய்திகள்

ஆட்டம்னா இப்படி இருக்கணும்.. பிக்பாஸ் தாமரை செல்வியின் வைரல் வீடியோ….

Published

on

விஜய் டிவியி தற்போது பிக்பாஸ் சீசன் 5 துவங்கியுள்ளது. இதில் 17 போட்டியாளர்கள் பங்கு பெற்றுள்ளனர். வழக்கம் போல் இந்த சீசனையும் கமல்ஹாசனே நடத்தி வருகிறார்.

இந்த போட்டியாளர்களில் நாடக கலைஞர் தாமரை செல்வியும் ஒருவர். அவர் மேடையில் கதை பேசிக்கொண்டே நடனமாடும் கலைஞர் ஆவார். புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர். சிறுவயது முதல் வறுமையை மட்டுமே பார்த்தவர். தெருக்கூத்து நாடகம் மூலம் தனது திறமை வளர்த்துக்கொண்டவர்.

கிராமங்களில் திருவிழா நடைபெறும் போது வள்ளி தெய்வானை நாடகத்தை அவர் அரங்கேற்றி நடித்து வருகிறார்.

பிக்பாஸ் வீட்டில் தனது சோக கதையை சொன்ன அவர் தன் மகனையே பார்க்க முடியாத நிலையில் இருப்பதாகவும், அவரின் உறவினர் வீட்டிலேயே இருப்பதாகவும் அவர் கண்ணீர் விட்டார்.

இந்நிலையில், மேடையில் அவர் வள்ளி தெய்வானை நாடகத்தை நடத்தும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த பலரும் இவரா தாமரை செல்வி என ஆச்சர்யப்பட்டுள்ளனர்.

ஆட்டம்னா இப்படி இருக்கணும் || தாமரைச்செல்வி | Dance Thamaraiselvi.

author avatar
seithichurul

Trending

Exit mobile version