சினிமா செய்திகள்

தாமரைக்கு இவ்வளவுதான் சம்பளமா? அந்த 12 லட்ச ரூபாய் பெட்டியையே எடுத்திருக்கலாம்!

Published

on

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அப்பாவியாக ஒரு கிராமத்து பெண்ணாக உள்ளே வந்த தாமரை கிட்டதட்ட டைட்டில் கட்டத்தை நெருங்கி விட்டது அனைவருக்கும் ஆச்சரியமாகத்தான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அவருடைய சக போட்டியாளர்களே அவரது திறமையை இந்த அளவுக்கு எதிர்பார்க்க வில்லை என்பதும் அவருக்கு மக்கள் மத்தியில் ஆதரவு குவிந்தது என்பதும் தெரிந்ததே. விஜய் டிவி பாலிடிக்ஸ் காரணமாகத்தான் அவர் வெளியேற்றப்பட்டு இருப்பார் என்றும் கண்டிப்பாக மக்கள் அவருக்கு ஓட்டு போடாமல் இருந்திருக்க மாட்டார்கள் என்ற விமர்சனமும் எழுந்து வருகிறது. கமல்ஹாசனே தாமரை வெளியேறுவதை பெரும் அதிருப்தியுடன் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த 98 நாட்களாக இருந்த தாமரைக்கு வெறும் 9.80 லட்சம் மட்டுமே சம்பளமாக வரும் என்றும் அதிலும் வரி பிடித்தம் போக குறைவாகத்தான் அவருக்கு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. இதற்கு முந்திய சீசன்களில் போட்டியாளர்களுக்கு தினசரி சம்பளம் வழங்கப்பட்டு வந்த நிலையில் இந்த சீசனில் பிரபலமில்லாதவர்கள் கலந்து கொண்டு இருப்பதால் வார சம்பளமாக பேசப்பட்டது என்றும் தாமரைக்கு வாரத்திற்கு 70 ஆயிரம் ரூபாய் சம்பளம் பேசப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி பார்த்தால் அவருக்கு வரி பிடித்தம் போக சுமார் 7 முதல் 8 லட்சம் வரை மட்டுமே சம்பளம் வரும் என்று கூறப்படுகிறது. ரூபாய் 12 லட்ச ரூபாய் பெட்டியை எடுத்துக் கொண்டு செல்லும் வாய்ப்பு அவருக்கு இருந்த போதிலும் அந்த பணத்தை அவர் பெரிதாக மதிக்கவில்லை என்பதும், சிபி எவ்வளவு கூறியும் அவர் தனக்கு கோடி ரூபாய் கொடுத்தாலும் பெட்டியை எடுக்க மாட்டேன் என்றும் தாமரை கூறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகம் இருப்பதால் அவரை பலவிதங்களில் பயன்படுத்த விஜய் டிவி முடிவு செய்திருக்கிறது. முதல் கட்டமாக ’குக் வித் கோமாளி சீசன் 3’ நிகழ்ச்சியில் தாமரை பங்கு கொள்ள இருப்பதாகவும் அதனை அடுத்து மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் அவரை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version