சினிமா செய்திகள்

பிக்பாஸ் தமிழ் சீசன் 5: போட்டியாளர்கள் யார் யார்?

Published

on

கடந்த நான்கு ஆண்டுகளாக பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக ஒளிபரப்பான நிலையில் நேற்று முதலாவது சீசன் தொடங்கியுள்ளது. உலகநாயகன் கமலஹாசன் இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் என்பதும் போட்டியாளர்களை அறிமுகப்படுத்தி வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இணையதளங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் கசிந்த நிலையில் அவர்களில் பலர் நேற்றைய நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக ஆரம்ப முதலே குக் வித் கோமாளி டைட்டில் வின்னர் கனி, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என்று கூறப்பட்ட நிலையில் அவர் கலந்து கொள்ளவில்லை.

அதேபோல் பிரியாராமன், ஜாக்குலின், மிளா உள்பட பலரது பெயர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக கூறப்பட்டது. ஆனால் எதிர்பாராத வகையில் நேற்று அறிமுகம் செய்யப்பட்ட 18 போட்டியாளர்களை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களின் விபரங்கள் பின்வருமாறு:

1. இசை வாணி: கானா பாடகி

2. ராஜு ஜெயமோகன்: சீரியல் நடிகர்

3. மதுமிதா: ஜெர்மனியை சேர்ந்த மாடல்

4. அபிஷேக் ராஜா: யூடியூப் பிரபலம்

5. நமிதா மாரிமுத்து: திருநங்கை மாடல்

6. பிரியங்கா: விஜய் டிவியின் தொகுப்பாளினி

7. அபினய்: ஜெமினி-சாவித்ரி தம்பதியின் பேரன்

8. பாவனி ரெட்டி: டிவி சீரியல் நடிகை

9. சின்ன பொண்ணு: நாட்டுப்புற பாடகி

10. நதியா சிங்: மலேசியா மாடல்

11. வருண்: நடிகர்

12. இமான் அண்ணாச்சி: நகைச்சுவை நடிகர்

13. ஸ்ருதி: மாடல்

14. அக்சரா: மாடல்

15. ஐக்கி பெர்ரி: ராப் இசை கலைஞர்

16. தாமரை செல்வி: நாடக கூத்து கலைஞர்

17. சிபி சந்திரன்: நடிகர், ‘மாஸ்டர்’ படத்தில் நடித்தவர்

18. நிரூப் நந்தகுமார்: மாடல்

seithichurul

Trending

Exit mobile version