சினிமா செய்திகள்

சத்தியமா நான் காணாமல் போக மாட்டேன்: கமலிடம் கதறியழுத சின்னப்பொண்ணு!

Published

on

சத்தியமாக நான் காணாமல் போக மாட்டேன் என கமல் முன்னிலையில் பிக் பாஸ் போட்டியாளர் சின்னப்பொண்ணு கதறி அழுத வீடியோ வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சி ஐந்தாவது சீசன் விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் நிலையில் இதில் தற்போது 17 போட்டியாளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று ஒரு போட்டியாளர் வெளியேற போகிறார் என்றும் அவர் நாடியா சாங் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் இன்றைய இரண்டாவது புரோமோ வீடியோவில் பிக் பாஸ் வீட்டில் ஜொலித்தவர் யார்? காணாமல் போனவர் யார்? என்று கமல்ஹாசன் கேட்க அதற்கு ஜொலித்தவர் இமான் அண்ணாச்சி என்றும் காணாமல் போனவர்கள் நாடியா மற்றும் சின்ன பொண்ணு அம்மா என்றும் அபிஷேக் கூறுகிறார்.

இதை கேட்டதும் கடுப்பாகிய நாடியா, ‘நான் மட்டும்தான் காணாமல் போனதாக அவரது கண்களுக்கு தெரிகின்றதா? என்னை பொருத்தவரை நான் காணாமல் போகவில்லை என்று பதிலடி கொடுத்தார்.

இதனை அடுத்து சின்ன பொண்ணு கதறி அழுதவாறு நான் மக்கள் முன்னிலையிலும், இந்த பிக் பாஸ் வீட்டின் முன்னிலையிலும், எப்போதும் காணாமல் போக மாட்டேன் என்று கதறி அழுதவாறு கமல்ஹாசனிடம் கூறினார்.

அபிஷேக் பேச்சால் நாடியா மற்றும் சின்னப்பொண்ணு ஆகிய இருவருமே மனம் வருந்தி உள்ளார்கள் என்பது இந்த வீடியோவில் இருந்து தெரிகிறது. இதன் எதிரொலி இனி வரும் நாட்களில் தெரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version