சினிமா செய்திகள்

பிக்பாஸ் வீட்டில் இன்று முதல் செண்டிமெண்ட் மழை: கண்ணீர்விட தயாராகுங்கள்!

Published

on

பிக்பாஸ் வீட்டில் இன்று முதல் சென்டிமென்ட் காட்சிகள் இருக்கும் என்றும் அதனால் பார்வையாளர்கள் கண்ணீர் விட தயாராகிக் கொள்ளுங்கள் என்றும் கூறப்பட்டு வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 77 நாட்களாக நடைபெற்றுள்ள நிலையில் இன்று 78வது நாள் நடைபெறுகிறது. ஒவ்வொரு சீசனிலும் பிக்பாஸ் போட்டியாளர்களின் குடும்பத்தினர் வருகை தரும்போது சென்டிமென்ட் உருக்கமாக இருக்கும் என்பதும் சக போட்டியாளர்கள் மட்டுமின்றி பார்வையாளர்களும் கண்ணீர் சிந்தும் வரையில் அந்த காட்சிகள் இருக்கும் என்பதும் தெரிந்ததே.

அந்த வகையில் இன்று முதல் போட்டியாளர்களின் உறவினர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் வருகை தர உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே உறவினர்கள் கடந்த சில நாட்களாக தனிமைப்படுத்துதல் காலத்தில் இருந்தனர் என்றும், இன்று முதல் ஒவ்வொரு குடும்பத்தினராக பிக்பாஸ் வீட்டிற்குள் வரவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இது வரை அதிரடி ஆக்ஷன் காட்சிகள், சண்டைக்காட்சிகள், காமெடி என இருந்த பிக்பாஸ் வீடு இன்னும் ஒரு சில நாட்களுக்கு சென்டிமென்டாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version