சினிமா செய்திகள்

ஷிவானி நாராயணனின் லேட்டஸ்ட் ‘பீஸ்ட்’ இதுதான்: வைரல் புகைப்படங்கள்!

Published

on

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனின் போட்டியாளர்களில் ஒருவர் ஷிவானி நாராயணன் என்பதும் இவர் ஆரம்பம் முதல் கிட்டத்தட்ட 80 நாட்கள் வரை பாலாஜி உள்பட ஒரு சிலரிடம் மட்டுமே நெருக்கமாக பழகி வந்தார் என்பதும் மற்ற போட்டியாளர்களிடம் கலகலப்பாக இல்லாதவர் என்றும் குற்றம் சாட்டப்பட்டது.

ஆனால் கடைசி நேரத்தில் வைக்கப்பட்டதாக டாஸ்க்கில் சிங்கப்பெண்ணாக வெற்றி பெற்று அதன் பின் 90 நாட்களுக்கு பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது. பிக்பாஸ் சிங்கப்பெண் ஷிவானிக்கு இன்ஸ்டாகிராமில் 3 மில்லியனுக்கும் அதிகமான பாலோயர்கள் உள்ளார்கள் என்பதும் அவர் பதிவு செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிக்பாஸ் ஷிவானி சமீபத்தில் பதிவு செய்துள்ள இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்றில் புதிய பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் கார் வாங்கி உள்ளதாக அறிவித்துள்ளார். அந்தக் காருடன் அவர் எடுத்து கொண்ட புகைப்படத்தையும் அவர் தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படத்திற்கு சுமார் 4 லட்சம் லைக்ஸ் கிடைத்துள்ளது.

மேலும் அவர் தனது புதிய பிஎம்டபிள்யூ காருக்கு அருகில் நின்று கொண்டு கொடுத்த போஸ் என்ன ஒரு ஸ்டைல் என ரசிகர்கள் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். தனது புதிய பிஎம்டபிள்யூ காரை ‘எனது புதிய பீஸ்ட்’ என்று என்று அவர் கேப்ஷனாக குறிப்பிட்டுள்ளதை அடுத்து இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் பிக்பாஸ் ஷிவானி நாராயணனுக்கு தற்போது திரைப்பட வாய்ப்புகள் கிடைத்துள்ளதாகவும் அவர் நடிக்கும் திரைப்படம் குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

https://twitter.com/ActressShivanii/status/1426119067451072526

Trending

Exit mobile version