சினிமா செய்திகள்

பிக்பாஸ் ஷெரினுக்கு கொரோனா பாதிப்பு: உருக்கமாக வெளியிட்ட வீடியோ!

Published

on

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரும் நடிகையுமான ஷெரின், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளதாக தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்தியா உள்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி மனித இனத்தை ஆட்டி படைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை திரையுலக பிரபலங்கள் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர் என்பதையும் ஒரு சிலர் பலியாகினர் என்பதையும் பார்த்தோம்.

கடந்த சில நாட்களாக திரையுலகினர் யாரும் கொரோனாவால் பாதிக்கப் படாமல் இருந்தது அனைவருக்கும் நிம்மதியை தந்து கொண்டிருந்த நிலையில் தற்போது பிக்பாஸ் ஷெரினுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு சமீபத்தில் செய்த சோதனையில் கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், இதனை அடுத்து என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தயவுசெய்து பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். இதனையடுத்து அவர் விரைவில் குணமாக வேண்டும் என்று ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அதேபோல் ஷெரின் வெளியிட்டுள்ள வீடியோவில், ‘துரதிஷ்டவசமாக நான் கொரோனாவால் பாதிக்கப்பட்டேன். இருப்பினும் நான் தடுப்பூசி போட்டு உள்ளதால் லேசான பாதிப்பு மட்டுமே உள்ளது. எனக்கு எந்தவிதமான அறிகுறியும் இல்லை. இருப்பினும் என்னை கடந்த 3 நாட்களில் சந்தித்தவர்கள் அனைவரும் தங்களை பரிசோதனை செய்துகொண்டு தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version