சினிமா செய்திகள்

இனி கிசுகிசு கூட பேச முடியாது: பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3வது புரமோ வீடியோ!

Published

on

பிக்பாஸ் வீட்டில் இனி கிசுகிசு கூட பேச முடியாது என புதிய ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது என செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கான போட்டியாளர்கள் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டு தனியார் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியை பிரபலப்படுத்தும் வகையில் புரோமோ வீடியோக்களை அவ்வப்போது விஜய் டிவி வெளியிட்டு வருகிறது என்பதும் ஏற்கனவே வெளியான இரண்டு வீடியோக்களும் மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது மூன்றாவது வீடியோ வெளியாகி உள்ளது.

இந்த வீடியோவில் கமல்ஹாசன் புத்தகம் படித்துக் கொண்டிருக்கும்போது கிசுகிசு என யாரோ பேசுகிறார்கள். யாரது என்ற கமல்ஹாசனின் கேள்விக்கு பதில் இல்லை. இதனை அடுத்து அவர் பிக்பாஸ் வீட்டில் யாருக்கும் தெரியாது என நினைத்து கிசுகிசு பேசுகிறார்கள், ஆனால் அதை ஊரே கேட்கிறது என்று கூறுகிறார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக குக் வித் கோமாளி டைட்டில் வின்னர் கனி, சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் பிரியங்கா உள்பட பலர் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Bigg Boss Tamil Season 5 - Promo 3

Trending

Exit mobile version