சினிமா செய்திகள்

பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளர்கள் இவர்களா?

Published

on

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஏற்கனவே நான்கு சீசன் முடிந்தது என்பதும் இந்த நான்கு சீசன்களிலும் ஆரவ், ரித்விகா, முகின், ஆரி ஆகியோர் டைட்டில் பட்டம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு மிகப்பெரிய பிரபலம் மற்றும் திரைப்பட வாய்ப்புகள் கிடைத்து வருவதாக கூறப்படுவதால் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனைத்து பிரபலங்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் தொடங்க வாய்ப்பு இருப்பதாகவும் அதற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. முதல் கட்டமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த தேர்வு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது

ஏற்கனவே இந்த நிகழ்ச்சியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான கனி, பவித்ரா, தர்ஷா குப்தா, ஷிவாங்கி, ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்பட்டது. மேலும் கடந்த சீசனில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட அசீம் உள்பட ஒருசில சீரியல் நட்சத்திரங்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிகிறது. அதேபோல் திரையுலகப் பிரபலங்களான ராதாரவி, ராதா, பூனம் பஜ்வா, ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த முழு தகவல் இன்னும் ஒரு சில நாட்களில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை கமல்ஹாசனே மீண்டும் தொகுத்து வழங்கப் போகிறார் என்பதும் உறுதியாகி உள்ளது, இதற்கான செட் அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது.

Trending

Exit mobile version