சினிமா செய்திகள்

மொத்த டாஸ்க்கையும் கெடுத்துட்டிங்க, குரூப் சேர்க்குறீங்க: இமான் மீது பாய்ந்த அபிஷேக்!

Published

on

பிக்பாஸ் வீட்டில் இன்று தலைவர் பதவிக்கான டாஸ்க் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது திடீரென இமான் அண்ணாச்சி மீது அபிஷேக் மோதியதன் வீடியோ வைரல் ஆகி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த இரண்டு வாரங்களாக விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் போட்டியாளர்களுக்கு இடையே எந்தவிதமான சண்டையும் இல்லை என்ற நிலை இருந்தது.

இந்த நிலையில் இன்று அடுத்த கேப்டன் யார் என்பதை முடிவு செய்யும் டாஸ்க் நடைபெற்றது. அதில் இசைவாணி மற்றும் ராஜூ ஜெயமோகன் கலந்து கொண்டனர். அப்போது இசை வாணியை சிரிக்கவைக்க அபிஷேக் வேறு சில முயற்சிகள் செய்தபோது இமான் அண்ணாச்சி அவரைக் கண்டித்தார்.

அப்போது இமான் அண்ணாச்சிக்கும் அபிஷேக்கிற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. நீங்கள்தான் மொத்த டாஸ்க்கையும் கெடுத்துவிட்டீர்கள் என்றும், நான் இப்பவே கதவை திறந்து விட்டு வெளியே செய்தாலும் ஏதாவது ஒன்று செய்து பிழைத்துக் கொள்வேன் என்றும், எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்றும் சம்பந்தமே இல்லாமல் உளறினார்.

மேலும் நீங்கள் தான் குரூப் சேர்க்குறீங்க என்று காரசாரமாக பேச, ‘நீ பெரிய புத்திசாலி என்று நினைத்து கொள்கிறாயா என்று இமான் கூறினார். அப்போது இமான் அண்ணாச்சிக்கு ஆதரவாக பிரியங்கா பேசினார். ’இதெல்லாம் டூ மச் இப்படி எல்லாம் பேசக்கூடாது என்று கூற நான் அப்படிதான் பேசுவேன் என்று அபிஷேக் கூற அந்த இடமே ஒரு பரபரப்பு ஆகிறது. மொத்தத்தில் அபிஷேக் பைத்தியம் முற்றி விட்டதாக நெட்டிசன்கள் நம்மளை பதிவுசெய்து வருகின்றனர்.

Trending

Exit mobile version