சினிமா செய்திகள்

எடிட் செய்த பிறகுதான் ஸ்கிரிப்ட் எழுதுகிறார்கள்: பிக்பாஸ் குறித்து அதிர்ச்சி கருத்து கூறிய சக்தி!

Published

on

ஒரு திரைப்படத்தில் ஸ்கிரிப்டை எழுதி படப்பிடிப்பு முடிந்த பின்னர்தான் எடிட்டிங் செய்வார்கள் என்றும் ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதலில் எடிட்டிங் செய்து விட்டு அதன் பிறகு ஸ்கிரிப்ட் எழுதுகிறார்கள் என்றும் அதனால்தான் அந்த நிகழ்ச்சியில் யாரை வேண்டுமானாலும் நல்லவர்களாக காட்டலாம் அல்லது கெட்டவர்களாக காட்டலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் சக்தி கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல இயக்குநர் பி வாசுவின் மகன் ஷக்தி சில திரைப் படங்களில் நடித்தாலும் அவர் நடித்த எந்த திரைப்படமும் பெரிதாக வெற்றி பெறவில்லை என்பதால் அவர் இன்னும் திரையுலகில் ஒரு இடத்தை பிடிக்க முடியாமல் உள்ளார். ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட பல பிரபலங்களுக்கு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் வாசு, தனது மகனுக்கு ஒரு சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த முடியாதது துரதிஷ்டமாகவே கருதப்படுகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறிய சக்தி, ‘நல்ல திரைக்கதையை தேர்வு செய்ய வேண்டும் என்பதற்காக சில திரைப்படங்களில் தான் நடிக்கவில்லை என்றும் அதில் முக்கியமானது தம்பிக்கோட்டை மற்றும் களவாணி என்றும் இந்த இரண்டு படங்களில் நான் நடித்து இருந்தால் எனது திரையுலக வாழ்க்கையை உச்சத்திற்கு சென்று இருக்கும் என்றும் கூறினார்.

மேலும் பிக்பாஸ் என்றால் பிரபலமாகலாம் என்று அனைவரும் கூறுகிறார்கள் என்றும் அது ஒரு சிலருக்கு பொருந்தும் என்றாலும் பலருக்கு அது பொருந்தாது என்றும் என்னை பொருத்தவரை நான் பிக்பாஸ் சென்று இருக்க கூடாது என்றும் பிக்பாஸ் சென்றதால் தான் எனது இமேஜ் டேமேஜ் ஆனது என்றும் கூறியுள்ளார்.

மேலும் ஒரு திரைப்படத்தை படமாக்கிய பின்னர்தான் எடிட் செய்வார்கள் என்றும் ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் எடிட் செய்து விட்டுதான் ஸ்கிரிப்ட் எழுதுகிறார்கள் என்றும் அதனால்தான் அதில் யாரை வேண்டுமானாலும் நல்லவர்களாக காட்டலாம் அல்லது யாரை வேண்டுமானாலும் கெட்டவர்களாக காட்டலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் சக்தி நடந்து கொண்ட விதத்தை வைத்து அவரை டிரிக்கர் சக்தி என இன்றும் நெட்டிசன்கள் அழைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version