சினிமா செய்திகள்

ஓல்டு ஏஜ் ஹோம் பெயரை மாற்ற பாத்திமாவை வெளியேற்றிய பிக்பாஸ்!

Published

on

பிக்பாஸ் 3வது சீசனில், ரசிகர்களின் ஒரே ஃபேவரைட்டாக லாஸ்லியா மட்டுமே இருந்து வருகிறார். பிக்பாஸ் 3வது சீசனில் பெரும்பாலும் வயதான போட்டியாளர்களே அதிகம் என்ற குற்றாச்சாட்டும் அதிகளவில் எழுந்தது.

அதற்கு காரணம் செய்திவாசிப்பாளரான பாத்திமா பாபு போட்டியாளராக வீட்டுக்குள் நுழைந்தது தான்.

லாஸ்லியாவுக்கு போட்டியாக மாடல் அழகி மீரா மிதுனை இறக்கினாலும், அவர்மீது உள்ள குற்றச்சாட்டுகள் அவரை இதுவரை ரசிக்கும் படி செய்யவில்லை.

இந்நிலையில், முதல் எவிக்‌ஷனில் அனைவரும் எதிர்பார்த்தது போலவே சீனியர் செய்திவாசிப்பாளரான பாத்திமா பாபுவை மக்கள் ஓட்டுப் போட்டு வெளியேற்றி விட்டார்கள் என கமல் பல வித வித்தைகளை காட்டி கடைசியில் எலிமினேட் செய்து விட்டார்.

இன்னும் அடுத்தடுத்த வாரங்களில் சீனியர்களான சேரன், சரவணன், ஷெரின், மோகன் வைத்தியா, வனிதா ஆகியோர் எலிமினேட் செய்யப்படுவார்கள் என தெரியவருகிறது. பார்க்கலாம் பிக்பாஸில் அடுத்து என்னவிதமான டாஸ்க்குகளை களமிறக்கப்போகிறார்கள், மேலும், புதிய சர்ச்சைகளை எப்படி கிளப்ப போகிறார்கள் என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.

seithichurul

Trending

Exit mobile version