சினிமா செய்திகள்

பிக்பாஸ் ஓடிடியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் இவர்களா?

Published

on

பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் ஒரு வாரத்தில் முடிவடைய உள்ள நிலையில் இந்த நிகழ்ச்சி முடிவடைந்த ஒரு சில நாட்களில் பிக்பாஸ் ஓடிடி, ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பப்பட உள்ளதாக வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிகழ்ச்சியில் 13 போட்டியாளர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் 70 நாட்கள் நடைபெறும் என்றும் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்றும் செய்திகள் வெளியானது.

இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களாக முதல் சீசனில் இருந்து 5 வது சீசன் வரை உள்ள போட்டியாளர்களில் 13 பேர் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தகவல்கள் வெளியான நிலையில் முதல் சீசனில் கலந்துகொண்ட சினேகன், ஓவியா, ஜூலி, மற்றும் சுஜா ஆகிய நால்வர் இந்த போட்டியில் கலந்து கொள்ள அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

அதேபோல் இரண்டாவது சீசனில் கலந்துகொண்ட யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா கலந்து கொள்வார்கள் என்றும் மூன்றாவது சீஸனில் இருந்து கவின் மற்றும் சாண்டி கலந்து கொள்வார்கள் என்றும் நான்காவது சீசனில் இருந்து ஆரி மற்றும் பாலாஜி கலந்து கொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது.

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் இந்த நிகழ்ச்சி இதுவரை ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து முற்றிலும் வித்தியாசமாகவும் கடுமையான டாஸ்குகள் கொண்டதாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version