சினிமா செய்திகள்

இந்த வார நாமினேஷனிலும் சிக்கிய பிரியங்கா: அடுத்தது அவர் தானா?

Published

on

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இதுவரை இரண்டு நாமினேஷன்கள் முடிந்துள்ள நிலையில் இரண்டிலுமே சிக்கிய பிரியங்கா மூன்றாவது முறையாக இன்று நடைபெற்ற நாமினேஷனிலும் சிக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நாமினேஷன் படலம் நடக்கும் என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்றைய நாமினேஷனில் சின்ன பொண்ணு மற்றும் அக்ஷரா ஆகிய இருவரை பிரியங்கா நாமினேட் செய்கிறார். அதேபோல் சின்ன பொண்ணு மற்றும் அக்ஷரா ஆகிய இருவருமே பிரியங்காவை நாமினேட் செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தாமரை மற்றும் இசைவாணி ஆகிய இருவரும் இமான் அண்ணாச்சியையும், இமான் அண்ணாச்சி இசைவானியையும் நாமினேட் செய்கிறார்கள். ஆகமொத்தம் இன்றைய நாமினேஷனில் பிரியங்கா, இமான் அண்ணாச்சி, இசைவாணி, அக்ஷரா, சின்ன பொண்ணு, ஆகியோர் இடம் பெற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் யார் யாரெல்லாம் நாமினேஷனில் உள்ளனர் என்பதை அடுத்து வரும் புரமோக்கள் மற்றும் இன்றைய இரவு நிகழ்ச்சியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் பிரியங்கா அணி என்று கூறப்பட்ட அணியில் பிரியங்கா, நிரூப் மற்றும் அபிஷேக் ஆகியோர் இருந்த நிலையில் தற்போது அந்த அணி உடைந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அபிஷேக் நேற்று வெளியேறிவிட்ட நிலையில் பிரியங்காவும் நிரூப்பும் நேற்று ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டனர்.

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வரும் போது பிரியங்காவுக்கு மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் மதிப்பும் மரியாதையும் இருந்தது. ஆனால் பிக்பாஸ் வீட்டில் ஒரே வாரத்தில் அவருடைய இமேஜ் சற்று குறைந்து வருவது போல் தெரிகிறது. எனவே இப்பொழுதே அவர் வெளியேறிவிட்டால் அவரது இமேஜ் ஓரளவு காப்பாற்றப்படும் என்றும், இல்லை என்றால் அர்ச்சனா போல அசிங்கப்பட்டு தான் வெளியேறுவார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே விஜய் டிவி நிர்வாகமே பிரியங்காவையும் அனேகமாக வெளியேற்றிவிட வாய்ப்பிருப்பதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். ஆனால் அதே நேரத்தில் சின்னப்பொண்ணு இந்த வாரம் வெளியேறவும் வாய்ப்பிருப்பதாக நெட்டிசன்கள் கணித்துள்ளனர். என்ன நடக்கப்போகிறது என்பதை வரும் நாட்களில் பொறுத்திருந்து பார்ப்போம்.

 

seithichurul

Trending

Exit mobile version