சினிமா செய்திகள்

இந்த வார நாமினேஷனில் ஆறு பேர்: யார் யார் தெரியுமா?

Published

on

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 20 நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று காலை வெளியான முதல் புரமோவில் இன்று நாமினேஷன் படலம் தொடங்கிவிட்டது என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள இரண்டாவது புரமோவில் யார் யார் நாமினேஷன் செய்யப்பட்டார்கள் என்பதை அதிகாரபூர்வமாக பிக்பாஸ் அறிவிக்கிறார். அதுமட்டுமின்றி நாமினேஷன் செய்யப்பட்டவர்கள் தங்களுடைய காயினை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அவர் அறிவிக்கிறார். இதனால் பிக்பாஸ் வீட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த வார நாமினேஷனில் பாவனி ரெட்டி, இசைவாணி, அபிநய், இமான் அண்ணாச்சி, வருண் மற்றும் பிரியங்கா ஆகிய 6 பேர் நாமினேஷன் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பவானி ரெட்டி, இசைவாணி மற்றும் வருண் ஆகிய மூவரிடமும் காயின்கள் இருப்பதால் அவர்கள் மூவரில் ஒருவர் அந்த காயின்களை பயன்படுத்துவார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

அவ்வாறு பயன்படுத்தினால் அவர்கள் தங்களுக்கு பதிலாக வேறு யாரை நாமினேட் செய்வார்கள் என்பதும் ஒரு விறுவிறுப்பான கட்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை இல்லாத வகையில் புதிதாக இந்த காயின் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளதால் இந்த 5 காயின்களும் பயன்படுத்தப்படும் வரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version