தமிழ்நாடு
இந்த வார நாமினேஷனில் சிக்கியவர்கள் யார் யார்? யார் யாரை நாமினேஷன் செய்தனர்?
![biggboss 5 promo 5 - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/09/biggboss-5-promo-5.jpg)
பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை அன்று நாமினேஷன் நடக்கும் என்பதும் அந்த நாமினேஷனில் சிக்கியவர்களில் குறைவாக வாக்குகள் வாங்கியவர்கள் அந்த வார இறுதியில் வெளியேற்றப்படுவார்கள் என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் கடந்த வார நாமினேஷனில் சிக்கிய இசைவாணி வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட நிலையில் நேற்று இந்த வாரத்திற்கான நாமினேஷன் நடந்தது. அதில் பிரியங்கா, தாமரை, நிரூப், இமான், பாவனி மற்றும் ஐக்கி பெர்ரி ஆகிய 6 பேர் சிக்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இந்த வாரம் யார் யாரையெல்லாம் நாமினேஷன் செய்தார்கள் என்பதை பார்ப்போம்.
நிரூப் – தாமரை, வருண்
தாமரை – பாவனி, பிரியங்கா
பாவனி – தாமரை, ராஜூ
ஐக்கி பெர்ரி – சிபி, பாவனி
ராஜூ – பிரியங்கா, ஐக்கி பெர்ரி
அபிஷேக் – இமான், தாமரை
இமான் – பிரியங்கா, பாவனி
வருண் – நிரூப், பிரியங்கா
பிரியங்கா – தாமரை, அக்சரா
சிபி – நிரூப், ஐக்கி பெர்ரி
அக்சரா – பிரியங்கா, நிரூப்
அபினய் – இமான், தாமரை