சினிமா செய்திகள்

இந்த வார நாமினேஷனில் சிக்கியவர்கள் யார் யார்? எலிமினேட் ஆகப்போவது யார்?

Published

on

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 75 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வரும் நிலையில் இந்த வாரம் நாமினேஷனில் சிக்கியவர்கள் யார் யார் என்பது குறித்த தகவலை தற்போது பார்ப்போம்.

பிக்பாஸ் நிகழ்ச்சியை பொருத்தவரை ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை புதிய கேப்டன் மற்றும் நாமினேஷன் படலம் நடைபெறும் என்பது தெரிந்ததே. நேற்று நடந்த புதிய கேப்டனுக்கான டாஸ்க்கில் தாமரை வெற்றி பெற்று இந்த வார கேப்டனாக பதவி ஏற்றுள்ளார்.
இதனையடுத்து நாமினேஷன் படலம் நடந்தது. அதில் ஒவ்வொரு போட்டியாளரும் 3 போட்டியாளர்களை நாமினேஷனில் செய்ய வேண்டும் என பிக்பாஸ் அறிவித்திருந்தார். அதன்படி அனைத்து போட்டியாளர்களும் நாமினேஷன் செய்ததை அடுத்து இந்த வாரம் சிபி, பாவனி, அக்ஷரா, நிரூப், பிரியங்கா மற்றும் வருண் ஆகிய 6 பேர் நாமினேஷன் செய்யப்பட்டுள்ளதாக பிக்பாஸ் அறிவித்தார்.

இந்த வாரம் யார் யாரை எல்லாம் நாமினேஷனில் செய்தார்கள் என்பதை பார்ப்போம்.

அமீர்: நிரூப், அக்சரா, பிரியங்கா
சிபி: அக்சரா, பாவனி, சிரூப்
பாவனி: அக்சரா, சிபி, பிரியங்கா
சஞ்சீவ்: சிபி, பிரியங்கா, பாவனி
அக்சரா; ப்ரியங்கா, பாவனி, அமீர்
வருண்: பிரியங்கா, நிரூப், அமீர்
ராஜூ: நிருப், பாவனி, சிபி
பிரியங்கா: சிபி, வருண், சஞ்சீவ்
தாமரை: நிரூப், பாவனி, பிரியங்கா

நாமினேஷன் செய்யப்பட்ட 6 பேர்களில் வருண் அல்லது நிரூப் எலிமினேட் ஆக அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version