சினிமா செய்திகள்

பிக்பாஸ் முகின் படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட்லுக் அறிவிப்பு!

Published

on

பிக் பாஸ் முகின் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு சட்ட முன் வெளியாகி உள்ள நிலையில் இந்த அறிவிப்பு தற்போது வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் முகின் என்பது தெரிந்ததே. இவர் சமீபத்தில் தமிழ் திரைப்படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். இந்த படத்தை கவின் என்பவர் இயக்கி வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. துல்கர் சல்மான் பர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்டுள்ள நிலையில் இந்த படத்திற்கு வேலன் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்திற்கு கோபி சுந்தர் இசை அமைத்து வருகிறார். கோபி ஜெகதீஸ்வரனின் ஒளிப்பதிவில், சரத்குமார் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தை ஸ்கைமேன் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த படம் முகினுக்கு முதல் படமாக இருந்தாலும் வெற்றி படமாக அமையும் என்று கோலிவுட் திரையுலகினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதுவரை தமிழில் வெளிவராத கதையம்சம் கொண்டது என்று இந்த படத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version