சினிமா செய்திகள்

சிம்பு ரசிகனாக நடிக்கும் மகத்! சோலோவாக சாதிப்பாரா பிக்பாஸ் ஹீரோ?

Published

on

சிம்புவின் சிலம்பாட்டம் படத்தில் இடம்பெற்ற தமிழன்னா நான் ஒரு தமிழன்டா என்ற பாடலில் கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன் டா என சிம்பு பாடுவார். அந்த பாடல் வரிகளை தலைப்பாக கொண்டு நடிகர் மகத், தற்போது சோலோ ஹீரோவாக நடிக்கவுள்ளார்.

அஜித்தின் மங்காத்தா விஜய்யின் ஜில்லா படங்களில் சிறு சிறு ரோலில் நடித்த மகத், பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார். மேலும், சிம்புவின் தீவிர ரசிகரான மகத், தற்போது, சிம்பு ரசிகனாகவே ஒரு படத்தில் நாயகனாக அறிமுகமாகிறார். முன்னதாக, சிம்புவின் ரசிகனான ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான பியார் பிரேமா காதல் வெற்றியடைந்த நிலையில், மகத்துக்கும் உதவி செய்கிறார் சிம்பு.

அறிமுக இயக்குநர் பிரபு ராம் இப்படத்தை இயக்குகிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதில், கையில் எஸ்.டி.ஆர் என பச்சைக் குத்தியுள்ளார் மகத். மேலும் பேக்ரவுண்டில், வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் கட்டவுட் தியேட்டருக்கு வெளியில் இருப்பது போன்று உள்ளது.

எல்லாம் சரி, படத்தின் நாயகி யாரு பாஸ் நம்ம பிக்பாஸ் ஐஸ்வர்யாவா?

seithichurul

Trending

Exit mobile version