சினிமா செய்திகள்

ஒ சொல்றியா மாமா, ஓஓ சொல்றியா மாமா: இது பிக்பாஸ் ஜூலியின் வெர்ஷன்!

Published

on

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த ’புஷ்பா’ திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும், உலகம் முழுவதும் வசூலை வாரி குவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் மட்டும் இந்த படம் சுமார் 400 திரையரங்குகளுக்கு மேல் வெளியானது என்பதும், வெளியான அனைத்து திரையரங்குகளிலும் ஹவுஸ்புல் காட்சிகளாக இந்த படம் திரையிடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் சமந்தாவின் ஐட்டம் பாடல் என்றும் ஒ சொல்றியா மாமா, ஓஓ சொல்றியா மாமா என்ற இந்த பாடல் பட்டிதொட்டியெங்கும் ஹிட் ஆகி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாடலை கோடிக்கணக்கானோர் யூடியூப்பில் பார்த்துள்ளனர் என்பதே இந்த பாடல் ஹிட்டானது சான்றாக கருதப்படுகிறது.

இந்த நிலையில் இந்த பாடலுக்கு பிக் பாஸ் சீசன் 1 போட்டியாளர் ஜூலி டான்ஸ் ஆடி அதன் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சமந்தாவுக்கே டஃப் கொடுக்கும் வகையில் ஜூலி இந்த பாடலுக்கு டான்ஸ் ஆடி இருப்பதாக ஒரு சிலர் கூறினாலும் பலர் அவரை கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. பிக்பாஸ் ஜூலியின் ஒ சொல்றியா மாமா, ஓஓ சொல்றியா மாமா வெர்ஷன் இதோ:

 

 

seithichurul

Trending

Exit mobile version