சினிமா செய்திகள்

பிக்பாஸ் இசைவாணி விவாகரத்து பெற்றவரா? வைரல் புகைப்படங்கள்

Published

on

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர் இசைவாணி திருமணமாகி கணவரிடமிருந்து விவாகரத்து பெற்றவர் என்ற செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டார்கள் என்பதும் அவர்களின் நமிதா எதிர்பாராத காரணத்தினால் விலகிவிட்டதை அடுத்து தற்போது 17 போட்டியாளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக போட்டியாளர்கள் தங்களுடைய சொந்தக் கதை சோகக் கதையைக் கூறி வருகிறார்கள் என்பதும் அதில் இசைவாணி முதலாவதாக தன்னுடைய சோக கதையை மனதை உருக்கும் வகையில் கூறினார் என்பதும் தான் சிறுவயதில் இருந்து கஷ்டப்பட்டதை அழுதுகொண்டே தெரிவித்தார் என்பதையும் பார்த்தோம்.

ஆனால் இவ்வளவையும் கூறிய அவர் தனது திருமணத்தையும் விவாகரத்தையும் மறைத்துவிட்டார் என்பது தற்போது தெரியவந்துள்ளது. பாடகி இசைவாணி கானா பாடகர் ஸ்ரீகாந்த் தேவா என்பவரை திருமணம் செய்து உள்ளார் என்பதும் அதன் பின் அவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக சட்டப்படி விவாகரத்து பெற்று பிரிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது இசைவாணி கலந்து கொண்டதை அடுத்து அவருடைய பழைய திருமண புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பாவனி ரெட்டி தனது திருமணம் மற்றும் கணவரின் தற்கொலையை வெளிப்படையாக கூறிய நிலையில் இசைவாணி மட்டும் தனது திருமணத்தையும் விவாகரத்தையும் மறைத்தது ஏன் என்று பிக்பாஸ் ரசிகர்கள் தற்போது கேள்வி எழுப்புகின்றனர். இது இசைவாணீக்கு ஒரு பெரிய நெகட்டிவ்வாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version