சினிமா செய்திகள்

டிவிக்கு முன்பே ஓடிடி: பிக்பாஸ் ஒளிப்பரப்பு குறித்த தகவல்!

Published

on

தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஏற்கனவே நான்கு சீசன்கள் முடிவடைந்த நிலையில் ஐந்தாவது சீசன் விரைவில் தொடங்கும் என்றும் ஐந்தாவது சீசனையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்கப் போகிறார் என்பதும் தெரிந்ததே. மேலும் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிக்கான போட்டியாளர்கள் தேர்வும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஹிந்தியில் பிக்பாஸ் 15 நிகழ்ச்சி மிக விரைவில் தொடங்க உள்ளது. அனேகமாக ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 15 நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பும் முன்பே வூட் ஓடிடியில் ஒளிபரப்பாக திட்டமிட்டிருப்பதாகவும் முதலில் ஓடிடியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி அதன் பின்னரே கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என்றும் கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி தொலைக்காட்சியில் இல்லாத பல காட்சிகள் வூட் ஓடிடியில் இருக்கும் என்றும் அதனால் அந்த ஓடிடியில் பிக்பாஸ் 15 நிகழ்ச்சியை பார்ப்பதற்கு அதிக பார்வையாளர்கள் வரக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

இந்த புதிய முயற்சி வெற்றி பெற்றால் அடுத்தடுத்த சீசன்களிலும் இதே போன்ற ஒரு முயற்சி எடுக்கப்படும் என்றும் இதனால் ஓடிடியில் அதிக பார்வையாளர்கள் வருவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தமிழில் ஒளிபரப்பாக இருக்கும் பிக் பாஸ் 5 நிகழ்ச்சியும் இதே போன்ற முதலில் ஹாட்ஸ்டார் அதன்பின் டிவி ஒளிபரப்பு என இருக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது ஆனால் அதே நேரத்தில் சீசன் 5 நிகழ்ச்சியிலேயே இது நடைமுறைக்கு வருமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

seithichurul

Trending

Exit mobile version