சினிமா செய்திகள்

பாதுகாப்புக்காக அதட்டுவது நம்ம தல அண்ணண்டா: பிக்பாஸ் நடிகை டுவிட்

Published

on

பாதுகாப்பாக அதட்டுவது நமது தாய் தந்தை மட்டும் தான் அந்த அளவில் பாதுகாப்புக்காக அதட்டுவது தாய் தந்தைக்கு நிகர் நம்ம தல என பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ஒருவர் தனது டுவிட்டரில் பதிவு செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தல அஜீத் சமீபத்தில் ஓட்டு போடுவதற்காக வாக்குச்சாவடிக்கு வந்தபோது அவரைப் பார்க்கவும், அவருடன் செல்பி எடுக்கவும் பலர் முண்டியடித்தனர். அப்போது ஒரு ரசிகரின் செல்போனை பிடுங்கிக் கொண்ட அஜித் அதன்பின் அந்த ரசிகரை கூப்பிட்டு கண்டித்ததோடு பொது இடத்தில் இவ்வாறு நடந்து கொள்ளக் கூடாது என அறிவுரை கூறினார்.

அதன் பிறகு அவர் செல்போனை திருப்பிக் கொடுத்தார். இது குறித்த புகைப்படங்கள் வீடியோக்கள் மிகப்பெரிய அளவில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது. அஜித்தின் இந்த செய்கை குறித்து பல்வேறு தரப்பினர் விமர்சனம் செய்தும் பாராட்டியும் தங்களது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வருகின்றனர்.

அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரும் காமெடி நடிகையுமான ஆரத்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: பாசத்திலும் கண்ணியம் தவறக்கூடாது தப்புநடக்கக்கூடாதுனு பாதுகாப்புக்காக அதட்டுவது கண்டிப்பது தகப்பனும் தாயும் தான் … அவர்களுக்கு நிகர் நம்ம தல #thala -அண்ணண்டா.3

seithichurul

Trending

Exit mobile version