சினிமா செய்திகள்

ஆரம்பிக்கலாமா?: அட்டகாசமான வெளியான ‘பிக்பாஸ் தமிழ் சீசன் 5 புரமோ!

Published

on

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசன் விரைவில் தொடங்கும் என்றும் அதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இன்று மாலை பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விஜய் டிவி வெளியிடும் என்றும் கூறப்பட்டது. அந்த வகையில் சற்று முன் விஜய் டிவி தனது டுவிட்டர் பக்கத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் புரமோ வீடியோவை வெளியிட்டுள்ளது.

கமல்ஹாசன் ’ஆரம்பிக்கலாமா’ என அட்டகாசமாக கூறுவதுடன் இந்த சீசனில் லோகோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அடுத்தடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் அப்டேட்களை விஜய் டிவி வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5 வது சீசனில் போட்டியாளர்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் விரைவில் இதுகுறித்த தகவல்கள் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. அதேபோல் அக்டோபர் 3ஆம் தேதி பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொடக்க விழா நடைபெறும் என்றும், அதனை அடுத்த 100 நாட்களில் இந்த சீசன் ஒளிபரப்பாகும் என்றும் கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆயுத பூஜை, தீபாவளி மற்றும் பொங்கல் திருவிழாக்கள் நடைபெறும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த சீசனில் இதுவரை இல்லாத அளவில் 2 திருநங்கை போட்டியாளர்கள் கலந்து கொள்ள இருப்பதாகவும் போட்டியாளர்களுக்கு கடுமையான டாஸ்குக்ள் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் புதிய விதிமுறைகள் சிலவற்றை இணைக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

Trending

Exit mobile version