சினிமா செய்திகள்

பிக்பாஸ் தொடங்கும் முன்பே ஆர்மி ஓபன் செய்த ரசிகர்கள்: டுவிட்டரில் டிரெண்ட்!

Published

on

விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் ஒரு சில மணி நேரத்தில் தொடங்க இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் குறித்த தகவல் கிட்டதட்ட வெளியாகிவிட்டது.

இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக மொத்தம் 18 பெயர்கள் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அவர்கள் கானா இசைவாணி, ராஜமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா, பிரியங்கா, அபினய் வாடி, சின்னப்பொண்ணு, பவானி ரெட்டி, நதியா சாங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி ஜெயதேவன், அப்சரா ரெட்டி ஆகியோர்கள் கலந்து கொள்வது உறுதி என தற்போது செய்திகள் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் இப்போதே ஒருசில போட்டியாளர்களுக்கு டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஆர்மிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. குறிப்பாக அப்சரா ரெட்டி, அபிஷேக் ராஜா, நதியாசிங், பவானி ரெட்டி ஆகியோர்களுக்கு ஆர்மிகள் ஆரம்பிக்கப்பட்டு டிரெண்டாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியில் முதல் நாளில் 18 போட்டியாளர்கள் அறிமுகம் செய்யப்படுகிறார்கள் என்றும் அதன்பின் வைல்டு கார்டு என்ட்ரி ஆக இரண்டு பேர்கள் வர இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் 18 போட்டியாளர்களும் ஒருவரை ஒருவர் இதற்கு முன் அறிமுகம் இல்லாதவர்கள் என்பதால் கூட்டணி அமைக்க வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. கடந்த முறை விஜய் டிவியில் இருந்த பிரபலங்கள் கூட்டணியாக ஒரு அணியை உருவாக்கியதால் தான் சுவராசியம் குறைந்தது என்றும் அந்த தவறை இந்த முறை விஜய் டிவி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version