சினிமா செய்திகள்

சென்றாயனுக்கு ஆண் குழந்தை பிறந்தது; வாழ்த்திய பிரபல இயக்குநர்!

Published

on

பிக்பாஸ் புகழ் சென்றாயன் பொல்லாதவன், ஆடுகளம், சிலம்பாட்டம் உள்ளிட்ட படங்களில் சிறு, சிறு கதாப்பாத்திரங்களில் நடித்தது மட்டுமில்லாமல் மூடர் கூடம் படம் மூலம் அனைவரின் கவனத்தையும் பெற்றார்.

அதே நேரம் 2014-ம் ஆண்டுக் கயல்விழி என்பவரைத் திருமணம் செய்துகொண்ட சென்றாயனுக்குக் குழந்தை பிறக்கவில்லை என்று 2014-ம் ஆண்டு நடைபெற்ற பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி மூலம் தெரியவந்தது.

அதுமட்டுமில்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்த ஓரு சில நாட்களில் சென்றாயன் மனைவி கற்பமானர் என்று செய்திகள் வெளியானது. பின்னர் அது பிக்பாஸ் நிகழ்ச்சியிலேயே சென்றாயனுக்குத் தெரிய வர அதை அறிந்த சென்றாயன் எவ்வளவு சந்தோசப்பட்டார் என்று அனைவரும் பார்த்தோம்.

தற்போது அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் மூடர்கூடம் திரைப்படத்தின் இயக்குநர் நவீன் “தம்பி சென்றாயனுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. மகிழ்ச்சியும் வாழ்த்துக்களும்” என்று டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version