சினிமா செய்திகள்

நீச்சல் உடையில் போஸ் கொடுத்துள்ள பிக்பாஸ் தர்ஷன் காதலி!

Published

on

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் பெண்களில் அழகானவர் என்றால் அது லாஸ்லியா தான். அவருக்காகவே பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பவர்கள் பலர் இருக்கின்றனர். அதே போல ஆண்களில் மாடலான தர்ஷன் படு கூலாகவும் ஹேண்ட்ஸம் ஆகவும் இருக்கிறார்.

இந்நிலையில், தர்ஷனின் காதலியும், மாடல் அழகி மற்றும் நடிகையுமான ஷனம் ஷெட்டியின் ஹாட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அண்மையில் தனியார் யூடியூப் சேனலுக்கு நீச்சல் குளத்திலேயே பேட்டியை கொடுத்துள்ள தர்ஷனின் காதலி ஷனம் ஷெட்டியின் நீச்சல் உடை போட்டோக்கள் வைரலாகி வருகின்றன.

இவர், அம்புலி, விலாசம், கதம் கதம் உள்ளிட்ட தமிழ் படங்களிலும், தெலுங்கு, மலையாள மொழிப் படங்களிலும் நாயகியாக நடித்து வருகிறார்.

மேலும், மாடலிங் துறையில் கலக்கி வருவதால், படுகவர்ச்சியான புகைப்படங்களால் தனது இன்ஸ்டா பக்கத்தை நிரப்பி வைத்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்த தகவல்கள் அதில் பங்கேற்பவர்களின் உறவினர்கள், காதலர்கள் குறித்த தகவல்களையும் ரசிகர்கள் தேடி வருவதால், ஷனம் ஷெட்டியின் சமூக வலைதளங்கள் நெட்டிசன்களால் டிராபிக் ஆகி வருகிறது.

சொல்ல முடியாது, பிக்பாஸ் வைல்ட் கார்டு ரவுண்டில் ஷனம் ஷெட்டி உள்ளே சென்றாலும் செல்லலாம்.

Trending

Exit mobile version