சினிமா செய்திகள்

விஷ பாட்டில், தொட்டாச்சிணுங்கி, சிம்ப்ளி வேஸ்ட் பட்டங்கள் பெற்ற போட்டியாளர்கள்!

Published

on

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 39 நாட்கள் நடைபெற்று முடிந்த நிலையில் இன்று 40வது நாள் நடைபெற உள்ளது. இன்றைய நிகழ்ச்சியின் முதல் புரமோவில் ராஜு ஜெயமோகன் பாவனியை வம்புக்கு இழுத்த நிலையில் தற்போது பாவனியை நிரூப் வம்புக்கு இழுக்கும் காட்சிகள் உள்ளன.

இன்றைய நிகழ்ச்சியில் அக்ஷராவுக்கு விஷ பாட்டில் பட்டம் கொடுக்கப்படுகிறது. இந்த பட்டத்தை பெற்றுக் கொண்ட அக்ஷரா தான் யாரையும் யாரிடமும் கொளுத்திப் போடுவது இல்லை என்றும் எனக்கு பிடிக்கவில்லை என்றால் ஒதுங்கிப் போய் விடுவேன் என்றும் கூறுகிறார்.

இதனை அடுத்து இசைவாணிக்கு தொட்டாசினிங்கி என்ற பட்டம் கொடுக்கப் படுகிறது. அவர் பட்டத்தைப் பெற்றுக் கொண்டு நான் யாருக்கும் பயப்பட மாட்டேன் ஏதாவது சொல்ல வேண்டுமென்றால் நேரடியாகவே சொல்வேன் என்று சொல்லிவிட்டு செல்கிறார்.

இதனை அடுத்து நிரூப்புக்கு சிம்பிளி வேஸ்ட் என்ற பட்டம் கொடுக்கப் படுகிறது. இந்த பட்டத்தை பெற்ற உடன் அவர் பாவனியை வம்புக்கு இழுப்பதும் பாவனி அதற்கு பதிலடி கொடுப்பதுமான காட்சிகள் இன்றைய புரமோவில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version