சினிமா செய்திகள்

பிக்பாஸ் நாமினேஷன்: பாவனி ரெட்டியை குறிவைக்கும் போட்டியாளர்கள்!

Published

on

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை இந்த வாரம் வெளியேற்றப்பட வேண்டிய போட்டியாளருக்காக நாமினேஷன் செய்யப்படும் என்பதும் கடந்த வாரம் பாவனி ரெட்டி தவிர மற்ற அனைத்து போட்டியாளர்களும் நாமினேசன் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று பிக் பாஸ் வீட்டில் இருந்து நாடியா சாங் வெளியேற்றப்பட்ட நிலையில் இந்த வாரம் வெளியேற்றப்படும் போட்டியாளருக்கான நாமினேசன் இன்று தொடங்கியது.

இன்றைய நாமினேஷன் பட்டியலில் பல போட்டியாளர்கள் பாவனி ரெட்டியை நாமினேஷன் செய்து அதற்கான காரணத்தையும் கூறுகின்றனர். பாவனி ரெட்டி மிகைப்படுத்தி நடிப்பதாகவும் தனது கதையை கூறி இறக்கம் தேடுவதாகவும் ஒரு சிலர் தெரிவித்தனர்
அதேபோல் சின்னப்பொண்ணுவையும் பல போட்டியாளர்கள் நாமினேட் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த வாரம் நாமினேஷனில் இருந்து தப்பிய பாவனி ரெட்டி, இந்த வாரம் நாமினேஷனில் சிக்கியுள்ள நிலையில் வெளியேற்றப்படுவாரா? அல்லது காப்பாற்றப்படுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Trending

Exit mobile version